செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

திட்டமிடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

( இந்த இடுகை இளைஞர்களுக்கும் இன்னும் இளைஞன் என்று நம்பிக்கொண்டுள்ளவர்களுக்கும், என்னையும் சேர்த்து)


அன்புள்ளங்களே,

 நாம் படித்து விட்டோ படிக்காமலோ பொருள் ஈட்ட வெளிநாடு வருகிறோம், கிடைத்த ஒரு வேலையில் அமர்ந்துசெட்டிலாகி ஓரிரு வருடங்களில் திருமணம் செய்து அடுத்த சில வருடங்களில் தந்தையாகி, இன்னும் சில வருடங்களில் மாமானராகி தாத்தா வாக பரினமிக்கிறோம்.

எல்லாம் சரி, நாம் பிறந்தது பொருளீட்ட மட்டும்தானா?

வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?

நாம் எப்போது நம்முடைய வாழ்க்கையை வாழப்போகிறோம்?

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதமா? இல்லை நம்முடைய எல்லா கடமையும் முடிந்த பிறகா???

சம்பாதிப்பது வாழ்வதற்கா? அல்லது வாழ்வே சம்பாதிப்பதற்கா?

என்ன செய்வது எனக்கு கடமைகள் உள்ளனவே,

தாய் தந்தையர்க்கு

உடன் பிறந்தோர்க்கு

மகன் படிப்புக்கு

மகள் திருமணதிற்கு

என்னுடைய ஓய்வு காலத்திற்கு ( கம்பெனி கொடுத்த கட்டாய ஓய்வு)

ஊருக்கு போய் என்ன செய்வது?

எனக்கு ஒரு தொழிலும் தெரியாதே

ஊரில் என்ன வியாபாரம் செய்வது

எல்லோரும் போய்விட்டால் ஊரில் என்ன வாய்ப்புகள்  உள்ளன

U A E  போதும் என்று போனவர்கள் எத்தனை பேர் திரும்பி வந்தார்கள் தெரியுமா?

எத்தனை பேர் சிரமத்தில் உள்ளார்கள் என்று தெரியுமா

என்னதான் சொல்ல வருகிறீர் என்று கேட்பது புரிகிறது

வாழ்க்கையை ரசியுங்கள், அனுபவியுங்கள் மனைவியுடன் குழந்தைகளுடன், உங்களின் அருகாமை அவர்களுக்கு மிகவும் தேவை, அவர்களின் அருகாமை உங்களுக்கும் தான்.

இளமையில் பகிர்ந்து , புரிதலுடன் வாழும் வாழ்க்கை தான் முதுமையில் மேலும் இறுக்கமாகும்.

எனது குறிக்கோளை எட்டிய பிறகுதான் வாழ்க்கையை அனுபவிப்பேன் என்பது, 

கொடைக்காணல் மலைசிகரம் எட்டிய பிறகுதான் அதன் அழகை ரசிப்பேன், மலையேறும் பொது வழியில்  உள்ள இயற்கையை ரசிக்க மாட்டேன் என்று கூறுவது  போல் உள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு?

திட்டமிடுங்கள்

இளைஞர்களே திட்டமிடுங்கள்


UAE வரும்போதே எத்தனை வருடம் இங்கு இருப்பது என்று தீர்மானியுங்கள், எத்தனை பணம் சேர்ப்பது என்றால் அது முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் (இப்போது ஓடுவது போல)

குடும்பத்துடன் இங்கே வசிக்க வாய்ப்புள்ளவர்கள் விதி விலக்கு.

வெளிநாடு செல்வது ஊரில் (சொந்த நாட்டில்) தொழில் தொடங்க முதலீடு ஈட்ட மட்டும் தான் என்று தீர்மானிப்பது,

மேற்படி காலகட்டத்தில் நமக்கு பிடித்த தொழில், வியாபாரம் குறித்த விபரங்களை சேகரியுங்கள்

ஓரளவு பொருளுடன், (ஓரளவு) இளமையுடன், நல்ல ஆரோக்யத்துடன் நாடு திரும்புங்கள்,

வியாபாரம் நம்மூரில் மட்டும் தான் செய்வேன் என்றில்லாமல் பக்கத்துக்கு வூர்களிலும் செய்யலாம்,

இது அல்லாமல் உற்பத்தி துறையில், (industrial line ) ஏற்றுமதி துறை சார்ந்த, விவசாய உற்பத்தி துறை போன்றவற்றிற்கு அரசாங்க மானியம் மற்றும் வங்கி கடனும் கிடைக்கும், அது பற்றி மேலதிக தகவல்களை பெற்று செய்யலாம்.


நம்மை விட வசதியில் குறைந்த  மக்கள் நாட்டில் சொந்த தொழில்  செய்து வருகிறர்கள், ஆகையால் நம்மாலும்  முடியும்.

நம் சமுதாய மக்களின் பொருளீட்டும் ஆதாரத்தை (economical base )
நாம் விரிவுபடுத்த வேண்டும்.

ஆகவே நண்பர்களே சிந்தியுங்கள், திட்டமிடுங்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

(மேலே சொல்லப்பட்டுள்ள குறள்
 என்னை இது குறித்து வரும் விமர்சனக்கனையில் இருந்து பாதுகாக்க )


அன்புடன்

நாசர்



















வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அரசாங்க உத்தியோகம்

 

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருளால் நமதூரில் தற்போது (ஆண்) பிள்ளைகள் குறைந்தது ஒரு டிகிரி அல்லது டிப்ளோமா படித்துவிடுகிறார்கள், இது ஒரு நல்ல முன்னேற்றம்.

அடுத்து அவர்கள பொருளீட்ட U A E க்குத்தான் வர வேண்டி உள்ளது, காலம் காலமாக நாம் நமது பொருளாதரத்தை வெளிநாட்டை நம்பித்தான் உள்ளோம். அல்ஹம்திளில்லாஹ் இப்போதுவரை எல்லாம் நன்றாகதான் போய்க்கொண்டுள்ளது ஆனால் நாம் இதோடு திருப்தியாக கூடாது.

படித்த மாணவர்கள் அரசாங்க வேலைகளுக்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்க்கான தேர்வுகளுக்கு தயாராக வேண்டும.

அதற்கென்று உள்ள பல்வேறு மையம்களில் சேர வேண்டும், சில இலவச மையங்களும் http://saidaiduraisamysmanidhaneyam.com/ , ஏராளமான தனியார் பயிற்சி மையங்களும் உள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில முகவரிகள அரசு  பரீட்சைகளின் இணய தளங்கள், இதில் ஏகப்பட்ட தகவல்கள் உள்ளன,

http://www.upsc.gov.in/

http://www.tnpsc.gov.in/

http://ssc.nic.in/

நாம் செய்ய வேண்டியவை:-

ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கீழ்க்கண்ட முயற்சிகளை செய்யலாம்.

மேற்கூறப்பட்ட பரிட்சைகளைபற்றியும் அதன் பணியிடங்கள் பற்றி நம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குவது (நோட்டீஸ் )

பொது இடம் ஒன்றில் இதற்கான தகவல்கள்  திரட்டி அளிப்பது
(எப்போது தேர்வு அறிவிப்பு வருகிறது, எங்கே விண்ணப்பம் செய்வது, எங்கே பயிற்சி கிட்டும் என்பது போன்ற செய்திகளை வெளியிடவேண்டும்.)

அந்த பொது  இடத்தில பல்வேறு பரிட்சைகளுக்கான புத்தகங்கள், வழிகாட்டிகள், கம்ப்யூட்டர் மற்றும்  விண்ணப்பங்களை தயார் நிலையில் வைத்திருப்பது.

ஊரில் உள்ள படித்த, இது குறித்த அறிவு உள்ள  நண்பர்களை அணுகி அவர்களின் தொடர்  பங்களிப்பை இந்த மையத்துக்கு வேண்டுவது,

நமதூரில் ஏற்கனவே இரண்டு சங்கங்களும், அவற்றுக்கு மொத்தம் நான்கு கட்டிடங்களும் உண்டு,

சமுதாய முன்னேற்றத்துக்கு மேற்படி சங்கங்கள் நிச்சயம் உதவும், நிர்வாகிகளை அணுகி அவர்களின்  சம்மதத்தை பெற்று இந்த மையத்தை அங்கே  நிறுவுவது.


அன்பு நண்பர்களின் மேலான கருத்துக்களையும், ஒத்துழைப்பையும் எதிநோக்குகிறேன்


நன்றியுடன்

நாசர்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தங்க விலை

அன்புடையீர் 

அஸ்ஸலாமு அலைக்கும்,

தற்போதைய தங்க  விலை சென்றுள்ள உச்சத்தை நம்முடைய சமுதாய கண்ணோட்டத்தில் நாம் நோக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

 தற்போது நம்முடைய திருமணங்களில், சபையில் வைத்து பதிவாளர்கள் (சங்கம்) பெண் வீட்டாரை பார்த்து பெண்ணுக்கு எத்தனை பவுன்? மாப்பிள்ளைக்கு  எத்தனை பவுன்? என்ற கேள்வியும் அதற்கு அவர்கள் பெண்ணுக்கு   50. பவுன் மாப்பிள்ளைக்கு 15.   பவுன என்றும், 
( இது வெறும் example மட்டும்தான், நடப்பில் இதைவிட அதிகம்) 

மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மகர் அல்லாமல் பெண் வீட்டார் போட்ட 15 பவுனை அப்படியே திருப்பி போடுவதும் வாடிக்கையாக உள்ளது.

 இந்த 65. பவுனுக்கான மதிப்பு இன்று நிலவரப்படி சுமார் 15. லட்சம.

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட  பெண் குழந்தைகள்  இருந்து ஒரு பெண்ணுக்கு 2. வருடம் முன்பு 65. பவுனில் நகை போட்டு இன்றைய சூழலில் அதே 65. பவுன் போடுவது மிகவும் கடினம்,

ஆகையால் கீழ்க்கண்ட தீர்வுகளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன், அது குறித்து  ஆரோக்யமான விவாதம் நடந்து முடிவுக்கு வந்தால் மிக்க சந்தோசம்.

1. சங்க பதிவேட்டில் பவுணின் திருமண நாளின் சந்தை மதிப்பை மட்டும்  பதிவு செய்யும் முறையை மேற்கொள்வது.

2. பெண்  வீட்டினர் மாப்பிள்ளைக்கு பவுன் போடுவதாக பதிவு செய்வதை நிறுத்துவது.

3. பெண்  வீட்டினர்  போடும் பவுனுக்கு உச்ச வரம்பு நியமிப்பது.

4. உச்ச  வரம்பை தாண்டி போடுபவர்கள் அதை சபையில் தெரிவிக்க கூடாது, அது சபை குறிப்பிலும் இடம் பெறாது, சபையில் தெரிவித்தல் அந்த திருமணம் பதிவு செய்ய மறுக்க வேண்டும்.

அன்பு நண்பர்களின் மேலான கருத்துக்களை எதி நோக்கும் 

நாசர்