செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

திட்டமிடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

( இந்த இடுகை இளைஞர்களுக்கும் இன்னும் இளைஞன் என்று நம்பிக்கொண்டுள்ளவர்களுக்கும், என்னையும் சேர்த்து)


அன்புள்ளங்களே,

 நாம் படித்து விட்டோ படிக்காமலோ பொருள் ஈட்ட வெளிநாடு வருகிறோம், கிடைத்த ஒரு வேலையில் அமர்ந்துசெட்டிலாகி ஓரிரு வருடங்களில் திருமணம் செய்து அடுத்த சில வருடங்களில் தந்தையாகி, இன்னும் சில வருடங்களில் மாமானராகி தாத்தா வாக பரினமிக்கிறோம்.

எல்லாம் சரி, நாம் பிறந்தது பொருளீட்ட மட்டும்தானா?

வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?

நாம் எப்போது நம்முடைய வாழ்க்கையை வாழப்போகிறோம்?

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதமா? இல்லை நம்முடைய எல்லா கடமையும் முடிந்த பிறகா???

சம்பாதிப்பது வாழ்வதற்கா? அல்லது வாழ்வே சம்பாதிப்பதற்கா?

என்ன செய்வது எனக்கு கடமைகள் உள்ளனவே,

தாய் தந்தையர்க்கு

உடன் பிறந்தோர்க்கு

மகன் படிப்புக்கு

மகள் திருமணதிற்கு

என்னுடைய ஓய்வு காலத்திற்கு ( கம்பெனி கொடுத்த கட்டாய ஓய்வு)

ஊருக்கு போய் என்ன செய்வது?

எனக்கு ஒரு தொழிலும் தெரியாதே

ஊரில் என்ன வியாபாரம் செய்வது

எல்லோரும் போய்விட்டால் ஊரில் என்ன வாய்ப்புகள்  உள்ளன

U A E  போதும் என்று போனவர்கள் எத்தனை பேர் திரும்பி வந்தார்கள் தெரியுமா?

எத்தனை பேர் சிரமத்தில் உள்ளார்கள் என்று தெரியுமா

என்னதான் சொல்ல வருகிறீர் என்று கேட்பது புரிகிறது

வாழ்க்கையை ரசியுங்கள், அனுபவியுங்கள் மனைவியுடன் குழந்தைகளுடன், உங்களின் அருகாமை அவர்களுக்கு மிகவும் தேவை, அவர்களின் அருகாமை உங்களுக்கும் தான்.

இளமையில் பகிர்ந்து , புரிதலுடன் வாழும் வாழ்க்கை தான் முதுமையில் மேலும் இறுக்கமாகும்.

எனது குறிக்கோளை எட்டிய பிறகுதான் வாழ்க்கையை அனுபவிப்பேன் என்பது, 

கொடைக்காணல் மலைசிகரம் எட்டிய பிறகுதான் அதன் அழகை ரசிப்பேன், மலையேறும் பொது வழியில்  உள்ள இயற்கையை ரசிக்க மாட்டேன் என்று கூறுவது  போல் உள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு?

திட்டமிடுங்கள்

இளைஞர்களே திட்டமிடுங்கள்


UAE வரும்போதே எத்தனை வருடம் இங்கு இருப்பது என்று தீர்மானியுங்கள், எத்தனை பணம் சேர்ப்பது என்றால் அது முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் (இப்போது ஓடுவது போல)

குடும்பத்துடன் இங்கே வசிக்க வாய்ப்புள்ளவர்கள் விதி விலக்கு.

வெளிநாடு செல்வது ஊரில் (சொந்த நாட்டில்) தொழில் தொடங்க முதலீடு ஈட்ட மட்டும் தான் என்று தீர்மானிப்பது,

மேற்படி காலகட்டத்தில் நமக்கு பிடித்த தொழில், வியாபாரம் குறித்த விபரங்களை சேகரியுங்கள்

ஓரளவு பொருளுடன், (ஓரளவு) இளமையுடன், நல்ல ஆரோக்யத்துடன் நாடு திரும்புங்கள்,

வியாபாரம் நம்மூரில் மட்டும் தான் செய்வேன் என்றில்லாமல் பக்கத்துக்கு வூர்களிலும் செய்யலாம்,

இது அல்லாமல் உற்பத்தி துறையில், (industrial line ) ஏற்றுமதி துறை சார்ந்த, விவசாய உற்பத்தி துறை போன்றவற்றிற்கு அரசாங்க மானியம் மற்றும் வங்கி கடனும் கிடைக்கும், அது பற்றி மேலதிக தகவல்களை பெற்று செய்யலாம்.


நம்மை விட வசதியில் குறைந்த  மக்கள் நாட்டில் சொந்த தொழில்  செய்து வருகிறர்கள், ஆகையால் நம்மாலும்  முடியும்.

நம் சமுதாய மக்களின் பொருளீட்டும் ஆதாரத்தை (economical base )
நாம் விரிவுபடுத்த வேண்டும்.

ஆகவே நண்பர்களே சிந்தியுங்கள், திட்டமிடுங்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

(மேலே சொல்லப்பட்டுள்ள குறள்
 என்னை இது குறித்து வரும் விமர்சனக்கனையில் இருந்து பாதுகாக்க )


அன்புடன்

நாசர்



















5 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்லதொரு அருமையான திட்டமிடல்.அனைவரும் திட்டமிட்டுவாழ்வது சிறப்பு அதனை இறைவன் நிறைவேற்றிதருவது தரவேண்டுவது அதைவிட சிறப்பு..

ஆமினா சொன்னது…

//கொடைக்காணல் மலைசிகரம் எட்டிய பிறகுதான் அதன் அழகை ரசிப்பேன், மலையேறும் பொது வழியில் உள்ள இயற்கையை ரசிக்க மாட்டேன் என்று கூறுவது போல் உள்ளது.

//

நல்லதொரு உவமை :-)

ஆமினா சொன்னது…

பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கலையா சகோ????

Naazar - Madukkur சொன்னது…

அன்புடன் மலிக்கா

//நல்லதொரு அருமையான திட்டமிடல்.அனைவரும் திட்டமிட்டுவாழ்வது சிறப்பு அதனை இறைவன் நிறைவேற்றிதருவது தரவேண்டுவது அதைவிட சிறப்பு.//



நன்றி சகோதரி உங்களின் வருகைக்கு

மற்ற பதிவுகளின் கருத்துக்களையும் தெரிவியுங்கள்

Naazar - Madukkur சொன்னது…

ஆமினா கூறியது

//கொடைக்காணல் மலைசிகரம் எட்டிய பிறகுதான் அதன் அழகை ரசிப்பேன், மலையேறும் பொது வழியில் உள்ள இயற்கையை ரசிக்க மாட்டேன் என்று கூறுவது போல் உள்ளது.

நல்லதொரு உவமை :-)


ஆமினா கூறியது...
பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கலையா சகோ?


வருக சகோதரி வருக,

நான் பிளாக்கர் உலகுக்கு புதியவன், நீங்கள் சொல்லிய பிறகு கெட்ஜெட் சேர்த்துவிட்டேன்.

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி,

மற்ற பதிவுகளின் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.